A.P.Mathan / 2015 ஜூன் 25 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணி ஒரு தொடர் தோல்வியையே சந்தித்துள்ளது. இருந்தாலும் இந்திய அணி சிறந்த அணியே என இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்த பருவகாலத்தின் இறுதிப் போட்டியை விளையாடியுள்ளோம். இனி எப்போது விளையாடுவோம் என எமக்கு தெரியாது. அணியின் வளர்ச்சி தொடர்ந்தும் ஏறு முகத்திலேயே செல்கின்றது. நாம் இரண்டாவது இடத்தில் உள்ளோம். 20 போட்டிகளில் 14 போட்டிகளில் இந்த பருவகாலத்தில் வெற்றி பெற்றுள்ளோம். ஒரு தொடர் தோல்வியை வைத்துக்கொண்டு இந்திய அணியை மோசமான அணி என கூறிவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டோனி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் நல்ல தலைவர். அவர் இன்னும் பல காலம் விளையாட வேண்டும். அவர் எத்தனை கிண்ணங்களை வெற்றி பெற்று கொடுத்துள்ளார் என பார்க்க வேண்டும். ஒரு தொடர் தோல்விக்காக அவரை விமர்சிக்கக்கூடாது என டோனிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago