A.P.Mathan / 2015 ஜூன் 28 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் விதிமுறை மாற்றங்களை செய்ய சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அணில் கும்ப்ளேயின் தலைமையிலான சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழு புதிய விதிமுறை மாற்றங்களுக்கான பரிந்துரையை செய்தது.
அதன்படி துடுப்பாட்ட பவர்பிளே நிறுத்தப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்கள் மட்டுமே பவர் பிளே பாவிக்கப்படும். 10 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரையில் எல்லைக்கோட்டில் 4 களத்தடுப்பாளர்கள் களத்தடுப்பில் ஈடுபடமுடியும். 40 ஓவர்கள் முதல் 50 ஓவர்கள் வரை எல்லைக்கோட்டில் 5 களத்தடுப்பாளர்கள் களத்தடுப்பில் ஈடுபடமுடியும்.
சகலவித முறையற்ற பந்துகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் ப்ரீ கிட் வழங்கப்படும்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago