2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

4ஆவது டெஸ்ட்: அவுஸ்திரேலியா அபார ஆட்டம்

A.P.Mathan   / 2015 ஜனவரி 06 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4ஆவதும் இறுதியுமான டெஸ்ட்போட்டி, இன்று சிட்னியில் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டோனி ஓய்வுபெற்றுக்கொண்டபின்னர் விராட் கோளியின் தலைமையில் இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். 

இந்திய அணியில் ஷிகர் தவான், புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். ஓய்வபெற்றுவிட்ட டோனிக்குப் பதிலாக ரித்திமன் சஹா விக்கெட் காப்பாளராக விளையாடுகிறார். அவுஸ்திரேலிய அணியில் காயமடைந்திருக்கும் மிட்செல் ஜோன்சனுக்குப் பதிலாக மிட்செல் ஸ்ட்ராக் உள்வாங்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களிருவரும் மிகச் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். 114 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றவேளையில் டேவிட் வோர்னர் ஆட்டமிழந்தபோது அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆக இருந்தது. மேலும் அணிக்கு 4 ஓட்டங்கள் கிடைத்தபோது 95 ஓட்டங்களைப் பெற்றிருந்த க்றிஸ் ரோஜர்சும் ஆட்டமிழந்தார். 

ஆயினும் அடுத்ததாக இணை சேர்ந்த வொட்ஸன், ஸ்டீபன் ஸ்மித் ஜோடியும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 348 வரை உயர்த்தினர். 

இன்றைய முதல்நாள் ஆட்ட முடிவின்போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. வொட்ஸன் 61 ஓட்டங்களோடும், ஸ்டீபன் ஸ்மித் 82 ஓட்டங்களோடும் ஆட்டமிழக்காமலிருந்தனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்களை மொஹமட சமியும், அஸ்வினும் கைப்பற்றியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .