2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

5ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 06 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான 5ஆவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது. 

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் 3 போட்டிகளையும் அவுஸ்திரேலியாவும், நான்காவது போட்டியை இங்கிலாந்தும் வென்ற நிலையில் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை (04) ஆரம்பமான இப்போடியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஜோ றூட்டின் 160, ஹரி ப்றூக்கின் 84, ஜேமி ஸ்மித்தின் 46 ஓட்டங்களோடு தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 384 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மைக்கல் நேஸர் 4, மிற்செல் ஸ்டார்க் 2, ஸ்கொட் போலண்ட் 2, கமரன் கிறீன் மற்றும் மர்னுஸ் லபுஷைன் ஆகியோர் தலா ஒவ்வொரு  விக்கெட்டைக் கைப்பற்றினர். 

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா, மூன்றாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 129, பியூ வெப்ஸ்டர் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். ட்ரெவிஸ் ஹெட் 163, லபுஷைன் 48, கமரன் கிறீன் 42 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிறைடன் கார்ஸ் 3, பென் ஸ்டோக்ஸ் 2, ஜொஷ் டொங், ஜேக்கப் பெத்தெல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .