Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊக்கமருந்துக்கு எதிரான உலக முகவராண்மையின் (WADA) தரவுத்தளம் ஊடுருவப்பட்டு (ஹக்), அங்கிருந்து திருடப்பட்ட தகவல்கள் ஏற்கெனவே மூன்று முறை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நான்காவது தடவையாகவும் தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், புரூண்டி, கனடா, டென்மார்க், பிரான்ஸ், பிரித்தானியா, ஹங்கேரி, ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 26 தடகள வீரர்களின் மருத்துவ அறிக்கைகளே இம்முறை வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியிடப்பட்டவர்களில் ஸ்பெய்னைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரபேல் நடால், பிரித்தானியாவின் நெடுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் ஃபாரா, அந்நாட்டைச் சேர்ந்த கோல்ப் வீரரான ஜஸ்டின் றோஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
வெளியிடப்பட்டுள்ள அனைத்து வீரர்களுமே, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை, மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்தினர் அல்லது பயன்படுத்துகின்றனர் என்பதை, குறித்த மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை, மருத்துவ காரணங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்படுவது வழக்கமானதாகும். எனவே, ஹக் செய்யப்பட்டு வெளியிடப்படும் இந்த மருத்துவ அறிக்கைகள், குறித்த வீரர்களையும் ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையையும் இலக்குவைத்து, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றதெனக் கருதப்படுகிறது.
இந்தக் கசிவு குறித்துக் கருத்துத் தெரிவித்த, இம்முறை மருத்துவ அறிக்கைகள் கசியவிடப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த ஹொக்கி வீராங்கனையான சமந்தா குவெக் கருத்துத் தெரிவிக்கையில், தனது தகவல்கள் வெளியிடப்பட்டமையை, வரையறை மீறிய ஒன்றாக உணர்வதாகவும், இவ்வாறு தகவல்கள் வெளியிடப்படுவதால், மருத்துவ காரணங்களுக்காக மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு, எதிர்கால இளம் வீரர்கள் தயங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அரச ஆதரவுபெற்ற ஊக்கமருந்துப் பாவனை, ரஷ்யாவில் இடம்பெறுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பலருக்குத் தடை விதிக்கப்பட்டதோடு, பராலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அந்நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதையடுத்தே, ரஷ்யாவைச் சேர்ந்த இந்த ஹக்கர்கள், இந்த ஹக் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago