2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அடுத்த போட்டியில் ஸ்டோக்ஸ் சந்தேகம்

Shanmugan Murugavel   / 2016 மே 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்குபற்றுவது, சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளன்று, அவரது முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சை பெற்ற அவர், பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார். பின்னர், மூன்றாவது நாளில் சில ஓவர்கள் மட்டுமே களத்தடுப்பில்  ஈடுபட்டு விட்டு மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், முதலாவது போட்டியில் பெறப்பட்ட வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், டேர்ஹாமில் இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள், ஸ்டோக்ஸூக்குக் குறைவாகவே காணப்படுவதை ஏற்றுக் கொண்டார். அவருக்கான ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் இரண்டாவது போட்டிக்கான குழாமில் சேர்க்கப்பட்டாலும், இன்னுமொரு வீரர் மேலதிகமாகச் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .