Shanmugan Murugavel / 2025 ஜனவரி 19 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 3-2 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாக மட்டியோ பொலிட்டானோ, ஸ்கொட் மக்டொமினி, றொமெலு லுகாக்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாக மட்டியோ றெடெகுய், அடெமோலா லுக்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாக சாமுவேல் மபன்குலா, திமோதி வெயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி உள்ளது. 44 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 43 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 37 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டர் மிலன் இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ளது.
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago