Shanmugan Murugavel / 2025 மார்ச் 05 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (05) அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 2-1 என்ற கோல் க்ணக்கில் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றது.
இன்னொரு லா லிகா கழகமான றியல் மட்ரிட் சார்பாக றொட்றிகோ, பிரஹிம் டியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூலியன் அல்வரேஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் சமப்படுத்தியது. டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் அடெயெமி பெற்றதோடு, லில்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹகன் அர்னர் ஹரல்ட்ஸன் பெற்றிருந்தார்.
42 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
1 hours ago
1 hours ago