Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் போட்டிகளின் நான்காம் சுற்றில், உலகின் மூன்றாம் நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
இத்தொடருக்காக 15ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சனை எதிர்கொண்ட அன்டி மரே, முதலாவது செட்டை 6-7 என்ற புள்ளிகள் கணக்கிலும் இரண்டாவது செட்டை 3-6 என்ற புள்ளிகள் கணக்கில் இழந்தார். மூன்றாவது செட்டை 7-6 எனப் போராடிக் கைப்பற்றிய அவர், நான்காவது செட்டை 6-7 என இழந்து, போட்டியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இதேவேளை, 13ஆம் நிலை வீரரான ஜோன் இஸ்னரை எதிர்கொண்ட இரண்டாம் நிலை வீரரான ரொஜர் பெடரர், 7-6, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார்.
தவிர, 5ஆம் நிலை வீரர் ஸ்டான் வவ்றிங்கா, 12ஆம் நிலை வீரரான பிரான்ஸின் றிச்சர்ட் கஸ்கெட் ஆகியோரும் காலிறுதிக்குத் தகுதிபெற்றனர். இதில், 6ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சைத் தோற்கடித்தே, கஸ்கட் தகுதிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், 2ஆம் நிலை வீராங்கனை சைமோனா ஹலெப், 5ஆம் நிலை வீராங்கனை பெட்ரோ குவிற்றோவா, 20ஆம் நிலை வீராங்கனை விக்டோரியா அஸரெங்கா, 26ஆம் நிலை வீராங்கனை ஃபிளாவியா பெனெற்றா ஆகியோர் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றனர்.
கலப்பு இரட்டையர் போட்டிகளில் பங்குபற்றிய இந்தியாவின் லியான்டர் பயஸ், சுவிற்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, றோமானிய ஜோடியான சிமோனா ஹலெப், ஹொலியா தெகா ஜோடிக்கெதிராக விளையாடவிருந்த போதிலும், ஹலெப்புக்கு எதிரான கால் உபாதை காரணமாக அந்த ஜோடி வெளியேற, பயஸ் - ஹிங்கிஸ் ஜோடிக்கு வெற்றி கிடைத்தது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago