2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அரையிறுதியில் லிவர்பூல்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் (கப்பிற்றல் வண் கிண்ணம்) தொடரின் அiரையிறுதிப் போட்டிக்கு, லிவர்பூல் அணி தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டிகளின் நான்காவது அணியாகவே, லிவர்பூல் நுழைந்தது.

சௌதம்டன் அணிக்கெதிராக சென். மேரிஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில், 6-1 என்ற கோல் கணக்கில் அதிரடியாக வெற்றிபெற்றே, லிவர்பூல் அணி அரையிறுதிக்கு நுழைந்தது.

இதில், லிவர்பூல் அணியின் டிவொக் ஒரிஜி 3 கோல்களைப் பெற்றுக் கொடுத்ததோடு, டானியல் ஸ்டர்ரிட்ஜ் 2 கோல்களையும் ஜோர்டன் இபே ஒரு கோலையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்தப் போட்டியின் முடிவோடு, எவேர்ட்டன், மன்செஸ்டர் சிற்றி, ஸ்டோக் சிற்றி, லிவர்பூல் ஆகியன, அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

இதில், எவேர்ட்டன் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் ஸ்டோக் சிற்றி அணியும் லிவர்பூல் அணியும், அரையிறுதிப் போட்டிகளில் எதிர்த்து விளையாடவுள்ளன. ஒவ்வோர் அரையிறுதிப் போட்டியும், சொந்த மைதானம், எதிரணி மைதானமென 2 போட்டிகளின் சேர்க்கையாகவே அமையவுள்ள நிலையில், இப்போட்டிகள், ஜனவரி 6ஆம், 6ஆம் 26ஆம், 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .