2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றில் முதன்முறையாக இடம்பெறவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலியக் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன், துடுப்பாட்ட வீரர் ஷோர்ன் மார்ஷ், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் ஒவ்கீவ் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மென்சிவப்பு கொக்கபுரா பந்தில் விளையாடப்படவுள்ள இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு 13 பேர் கொண்ட குழாமை தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதில், ஓய்வு பெற்ற வேகப் பந்துவீச்சாளர் மிற்செல் ஜோன்சனுக்கு பதிலாக ஜேம்ஸ் பட்டின்சனும் காயமடைந்துள்ள துடுப்பாட்ட வீரர் உஸ்மான் க்வாஜாவுக்கு பதிலாக ஷோர்ன் மார்ஷும் அடிலெயிட் ஆடுகளம் எவ்வாறு செயற்படும் என்று தெரியாததால் மேலதிக சுழற்பந்துவீச்சாளராக ஒவ்கீவ்வும் அவுஸ்திரேலியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எனினும் மென்சிவப்பு நிறப் பந்தானது, தனது நிறத்தை இழக்காமை இருக்கும் பொருட்டு புற்தரை ஆடுகளமே, அடிலெயிட் டெஸ்ட் போட்டிக்கு தயார்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழாம்: ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், ஜோஷ் ஹெசில்வூட், நேதன்‌ லயோன், மிற்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், பீற்றர் நெவில், ஸ்டீபன் ஒவ்கீவ், ஜேம்ஸ் பட்டின்சன், மிற்செல் ஸ்டார்க், பீற்றர் சிடில், அடம் வொஜஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .