2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழாமில், நியூசிலாந்துக்கெதிரான தொடரில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்குக்குப் பதிலாக, நேதன் கோர்ட்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், விளையாடும் பதினொருவரில், ஸ்டார்க்குக்குப் பதிலாக ஜேம்ஸ் பற்றின்சனே இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிகமாக, மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான ஸ்கொட் போலன்ட், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட் இருவருக்கும் உடற்தகுதிப் பிரச்சினைகள் காணப்படும் நிலையில், அவர்களிருவரும் உபாதைக்குள்ளாகும் பட்சத்தில், மாற்று ஏற்பாடாகவே, போலன்ட் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

குழாம்: டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், பீற்றர் சிடில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் கோர்ட்டர் நைல், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்.
மாற்று வீரர் - ஸ்கொட் போலன்ட்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .