Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கல் கிளார்க்கின் ஓய்வினைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் நியமிக்கப்படும், முதலாவது டெஸ்ட் குழாம் இதுவாகும்.
உப தலைவராக நியமிக்கப்பட்ட டேவிட் வோணர், காயம் காரணமாக இத்தொடரில் பங்குபெற முடியாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தொடருக்கான உப தலைவராக அடம் வோஜஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புது முகங்களாக, வேகப்பந்து வீச்சாளர் அன்ட்ரூ ஃபேகெட்டே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரொன் பான்குறொப்ற் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களாக மிற்சல் ஜோன்சன், ஜொஷ் ஹேஸல்வூட் இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதோடு, ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, கிளென் மக்ஸ்வெல், ஸ்டீஃபன் ஓஃப்கீ ஆகியோருக்கு டெஸ்ட் குழாமுக்கான மீள் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட், எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
குழாம்:ஸ்டீவ் ஸ்மித், அடம் வோஜஸ், கமரொன் பான்குறொப்ற், ஜோ பேர்ண்ஸ், பற் கமின்ஸ், அன்ட்ரூ ஃபெகேட்டே, உஸ்மான் கவாஜா, நேதன் லையன், மிற்சல் மார்ஷ், ஷோன் மார்ஷ், கிளென் மக்ஸ்வெல், பீற்றர் நெவில், ஸ்டீஃபன் ஓஃப்கீ, பீற்றர் சிடில், மிற்சல் ஸ்டார்க்
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago