Shanmugan Murugavel / 2016 நவம்பர் 14 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் 3ஆம் நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி போராடினாலும், தென்னாபிரிக்க அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுடன் இன்றைய 3ஆவது நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, குயின்டன் டீ கொக்கின் 2ஆவது டெஸ்ட் சதத்தின் உதவியுடன், 326 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் குயின்டன் டீ கொக் 104, தெம்பா பவுமா 74, ஹஷமிம் அம்லா 47, வேர்ணன் பிலாந்தர் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொஷ் ஹேஸல்வூட் 6 விக்கெட்டுகளையும் மிற்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
முதல் இனிங்ஸில் 85 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அவுஸ்திரேலிய அணி, 241 ஓட்டங்களால் பின்னிலையில் காணப்பட்ட நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. இன்றைய நாள், போதுமான வெளிச்சமின்மை காரணமாக இடைநிறுத்தப்படும் போது அவ்வணி, 2 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 56, டேவிட் வோணர் 45 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கைல் அபொட், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago