Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , மு.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியில், ஓர் இனிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.
241 ஓட்டங்களால் பின்னிலையில் காணப்பட்ட நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களுடன் இன்றைய 4ஆவது நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 161 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் இனிங்ஸாலும் 80 ஓட்டங்களாலும் படுதோல்வியடைந்தது. உஸ்மான் கவாஜா, டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவர் மாத்திரமே, இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றனர்.
டேல் ஸ்டெய்னின் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடிய கைல் அபொட், முதலாவது இனிங்ஸில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளுக்கு மேலதிகமாக, இந்த இனிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஸ்கோர் விவரம்...
அவுஸ்திரேலியா: 85/10 (துடுப்பாட்டம்: ஸ்டீவன் ஸ்மித் ஆ.இ 48, ஜோ மெனி 10 ஓட்டங்கள். பந்துவீச்சு: வேர்ணன் பிலாந்தர் 5/21, கைல் அபொட் 3/41)
தென்னாபிரிக்கா: 326/10 (துடுப்பாட்டம்: குயின்டன் டீ கொக் 104, தெம்பா பவுமா 74, ஹஷிம் அம்லா 47, வேர்ணன் பிலாந்தர் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேஸல்வூட் 6/89, மிற்சல் ஸ்டார்க் 3/79)
அவுஸ்திரேலியா: 161/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 64, டேவிட் வோணர் 45, ஸ்டீவன் ஸ்மித் 31 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் அபொட் 6/77, கஜிஸ்கோ றபடா 4/34)
போட்டியின் நாயகன்: கைல் அபொட்
தொடர் நிலை: தென்னாபிரிக்கா 2-0
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago