Shanmugan Murugavel / 2016 ஜனவரி 31 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியிலும், இந்தியா அணி வெற்றிபெற்று, இத்தொடரை இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. இதில், மேற்படி போட்டியில், அவுஸ்திரேலிய அணித் தலைவராக கடமையாற்றிய ஷேன் வொற்சன் 71 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6, ஆறு ஓட்டங்கள், 10, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 124 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக ஆஷிஷ் நெஹ்ரா, இரவிச்சந்திரன் அஸ்வின், யுவராஜ் சிங், இரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா ஒவ்வொறு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு 198 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இனிங்ஸின் இறுதிப் பந்தில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் ஒரு ஆறு ஓட்டம், 5, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 52 ஓட்டங்களையும் விராத் கோலி 36 பந்துகளில், ஒரு ஆறு ஓட்டம், இரண்டு, நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா, 25 பந்துகளில், ஆட்டமிழக்காமல் ஒரு ஆறு ஓட்டம், ஆறு, நான்கு ஓட்டங்கள், உள்ளடங்கலாக 49 ஒட்டங்களையும் பெற்றனர்.
இத்தொடரின் நாயகனாக, விராத் கோலியும் இப்போட்டியின் நாயகனாக ஷேன் வொற்சனும் தெரிவாகினர்.
இவ் வெற்றியுடன் இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு இந்தியா சென்றுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago