2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில், 3ஆவது நாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.

அவுஸ்திரேலிய அணிக்கும் பிஜி அணிக்குமிடையிலான போட்டியில், அவுஸ்திரேலிய அணி 28-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. பாதிநேரத்தின் போது 18-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த அவுஸ்திரேலியா, இரண்டாவது பாதியில் 10 புள்ளிகளைப் பெற்று, 10 புள்ளிகளை விட்டுக் கொடுத்திருந்தது. இறுதியில், 28-13 என்ற புள்ளிகள் கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இப்போட்டியின் நாயகனாக, டேவிட் பொகொக் தெரிவானார்.

தென்னாபிரிக்கா அணியை வென்று அதிர்ச்சியளித்த ஜப்பான் அணி, ஸ்கொட்லாந்துடன் இடம்பெற்ற போட்டியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டது. போட்டியின் முதற்பாதியில், 12-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்கொட்லாந்து முன்னிலை வகித்த போதிலும், அவ்வணிக்கான நிச்சயமான வாய்ப்பேதும் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்கொட்லாந்து, 45-10 என்ற புள்ளிகள் கணக்கில் இறுதியில் வெற்றிபெற்றுக் கொண்டது.

பிரான்ஸ் அணிக்கும் றோமானிய அணிக்குமிடையிலான போட்டியில் பிரான்ஸ் அணி, 38-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. ஆரம்பத்தில் இரு அணிகளும் போராடிய போதிலும், முதலாவது பாதியை 17-6 என்ற புள்ளிகள் கணக்கில் நிறைவுசெய்த பிரான்ஸ், இரண்டாவது பாதியில் மேலும் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, 38-11 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .