Shanmugan Murugavel / 2021 மே 02 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், எவெர்ற்றனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அஸ்தன் வில்லாவுக்குமிடையிலான போட்டியில், 1-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது.
எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிச் கல்வேர்ட்-லூயின் பெற்றதோடு, அஸ்தன் வில்லா சார்பாக, ஒலி வட்கின்ஸ், அன்வர் எல் கஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டி முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 80 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 67 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 63 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும், 61 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செல்சியும் காணப்படுகின்றன. இதில், ஏனைய அணிகளை விட யுனைட்டெட் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago