Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் – 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. நேபாளத்துடனான தமது முதலாவது குழு நிலைப் போட்டியை வென்ற பாகிஸ்தான், பல்லேகலவில் சனிக்கிழமை (02) நடைபெற்ற இந்தியாவுடனான போட்டியில் முடிவேதும் பெறப்படாதைத் தொடர்ந்தே சுப்பர் – 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
மழை குறுக்கிட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷகீன் ஷா அஃப்ரிடி (4), ஹரிஸ் றாப் (3), நசீம் ஷாவிடம் (3) விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோது இஷன் கிஷனின் 82 (81), ஹர்டிக் பாண்டியாவின் 87 (90) ஓட்டங்களால் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் விட்டு விட்டுப் பெய்த மழையால் பாகிஸ்தானின் இனிங்ஸே ஆரம்பித்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள மெய்நிகர் விலகல் போட்டியில் நேபாளத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago