2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஆர்சனல், செல்சி முகாமையாளர்கள் மோதல்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்சனல், செல்சி அணிகளுக்கிடையிலான இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டியில், செல்சி அணியின் டியாகோ கொஸ்டாவின் நடத்தை தொடர்பாக இரு அணிகளின் முகாமையாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்சனல் - செல்சி அணிகளுக்கிடையிலான போட்டியில், ஆர்சனலின் லாரென்ட் கொஸ்சின்லியை அறைந்து, அவரை நிலத்தில் வீழ்த்திய கொஸ்டாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. மாறாக, அவரது நடவடிக்கைக்குப் பதிலளித்த கொஸ்சின்லிக்கு, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில், அவர் இவ்வாறான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற போதிலும், பலவீனமான மத்தியஸ்தம் காரணமாக அவருக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை என, ஆர்சனலின் வெங்கர் குறிப்பிடுகிறார். அத்தோடு, அவருக்கு 3 போட்டிகளுக்கான தடை விதிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.

மறுபுறத்தில், வெங்கரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த செல்சி முகாமையாளர் மொரிங்கோ, ஆர்சனலுக்கெதிராக 12, 15 அல்லது 18 தடவைகள் விளையாடியுள்ளதாகவும், ஒரேயொரு தடவை மாத்திரமே அவர் முறையிடவில்லை எனவும், அப்போது, போட்டியையும் கிண்ணத்தையும் தாங்கள் தோற்ற சந்தர்ப்பமாக அது இருந்ததாகவும் தெரிவித்தார்.

தோல்வியுற்ற போது, எந்தவித சாக்குப் போக்குகளைத் தெரிவிக்கவில்லை எனவும், அழவில்லை எனவும், முறைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதேபோல், இத்தோல்வியையும் வெங்கர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .