Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், செல்சி, ஏ.எப்.சி போர்ன்மௌத், வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன், வட்‡போர்ட், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன.
ஆர்சனல் அணிக்கும் செல்சி அணிக்குமிடையிலான போட்டியில், செல்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆர்சனல் அணியின் கப்றியல் பௌலிஸ்டா 45ஆவது நிமிடத்திலும் சன்டி கஸோர்லா 79ஆவது நிமிடத்திலும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட, 9 பேர் கொண்ட அணியாக அவ்வணி விளையாடியிருந்தது. செல்சி சார்பாக 53ஆவது நிமிடத்தில் கேர்ட் ஸெளமா, 90ஆவது நிமிடத்தில் ஈடன் ஹஸார்ட் ஆகியோர் கோல்களைப் பெற்றனர்.
ஏ.எப்.சி போர்ன்மௌத், சன்டர்லான்ட் அணிகளுக்கிடையிலான போட்டியில், 4ஆவது நிமிடத்தில் கலம் வில்சன், 9ஆவது நிமிடத்தில் மற்றிற்சி ஆகியோர் பெற்றுக்கொடுத்த கோல்களின் உதவியுடன், ஏ.எ‡ப்.சி போர்ன்மௌத் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்கும் அஸ்டன் வில்லா அணிக்குமிடையிலான போட்டியில், 39ஆவது நிமிடத்தில் சாய்டோ பெராஹினோ பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ப்ரோம்விச் வெற்றிபெற்றது.
வட்போர்ட் அணிக்கும் நியூகாசில் யுனைட்டட் அணிக்குமிடையிலான போட்டியில், 10ஆம், 28ஆம் நிமிடங்களில் ஒடியன் இகாலோ பெற்றுக்கொடுத்த கோல்களின் உதவியுடன், வட்போர்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. நியூகாசில் சார்பான கோலை, 62ஆவது நிமிடத்தில் டரைல் ஜன்மாட் அடித்தார்.
ஸ்டோக் சிற்றி அணிக்கும் லெய்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டி, 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
ஸ்வான்சீ சிற்றி அணிக்கும் எவேர்ட்டன் அணிக்குமிடையிலான போட்டி, 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிக்கும் மன்செஸ்டர் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
6ஆவது நிமிடத்தில் விக்டர் மோஸஸூம் 31ஆவது நிமிடத்தில் டியா‡ப்றா சகோவும் கோல்களைப் பெற, மன்செஸ்டர் சிற்றி சார்பாக கெவின் டி பிறையுன் பெற்றுக் கொடுத்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago