2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

ஆஷஸ் போட்டி: மன்னிப்பு கேட்ட டிராவிஸ்

Editorial   / 2025 நவம்பர் 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஆஷஸ் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் நடசத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இதற்காக மூன்றாம் நாளுக்கான டிக்கெட் வாங்கியவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பேர்த்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து  துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது., ஆஸி. அணி 132 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 106க்கு 1-இல் இருந்து 132க்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  .

அடுத்து விளையாடிய ஆஸி, அணி 28.2 ஓவர்களில் 205/2 ஓட்டங்களை எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இது குறித்து அவர் பேசியதாவது:

மூன்றாம் நாளுக்கான டிக்கெட் வாங்கிய 60,000 மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இது நம்பமுடியாத வெற்றி. உணர்ச்சிகள் அதிகமாக இருக்கின்றன. நான் பங்களித்த விதம் நினைத்து சிறப்பாக உணர்கிறேன் என்றார்.

இரண்டாவது ஆஷஸ் டிச.4ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நவ.29-இல் பிரைம் மினிஸ்டர் லெவன்ஸ் உடன் இங்கிலாந்து பயிற்சி ஆட்டத்தில் ஆடவிருக்கிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X