2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

இ – 20 உலகக் கிண்ணம்: அதிக ஓட்டங்களைக் குவித்த பாகிஸ்தானின் பர்ஹான்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் முடிவுக்கு வந்த 2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பாகிஸ்தானின் சஹிப்ஸடா பர்ஹான் பெற்றுள்ளார்.

இத்தொடரில் ஏழு போட்டிகளில் ஆறு இனிங்ஸ்களில் 100 பந்துகளில் 160.25 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 383 ஓட்டங்களை பர்ஹான் பெற்றிருந்தார்.

இதேவேளை நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட் 9 போட்டிகளில் 8 இனிங்ஸ்களில் 100 பந்துகளில் 166.32 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 326 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.

இந்நிலையில் இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய இந்தியாவின் சஞ்சு சாம்சன், 100 பந்துகளுக்கு 199.37 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 321 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .