Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 19 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையில் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொல்கத்தாவில் தற்போது முடிவுக்கு வந்த இத்தாலிக்கெதிரான குழு சி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இத்தாலியின் அணித்தலைவர் ஹரி மனென்டி மே. தீவுகளை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மே. தீவுகள், அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் 75 (46), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட்டின் ஆட்டமிழக்காத 24 (15), றொஸ்டன் சேஸின் 24 (25), மத்தியோ போர்டேயின் ஆட்டமிழக்காத 16 (08) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கிறிஷன் கலுகமலே 4-0-25-2, பென் மனென்டி 4-0-37-2, அலி ஹஸன் 3-0-24-1, ஜே.ஜே. ஸ்மட்ஸ் 4-0-27-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 166 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி, போர்டே (3), அகீல் ஹொஸைன், ஷாமர் ஜோசப் (4), குடகேஷ் மோட்டியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே பெற்று 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக ஹோப் தெரிவானார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026