Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 26 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குழு ஒன்று சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெறுவதற்கு 177 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், ககிஸோ றபடா (2), லுங்கி என்கிடி (3), கொர்பின் பொஷ்ஷிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 10.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியபோதும் றொமாரியோ ஷெப்பர்ட்டின் ஆட்டமிழக்காத 52 (37), ஜேஸன் ஹோல்டரின் 49 (31) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
6 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 minute ago