2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இங்கிலாந்தை தோற்கடித்தது இலங்கை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இடம்பெற்றுவரும் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்துடனான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக தலைவர் சரித் அசலங்க 48 ஓட்டங்களையும் ஷம்மு அஷான் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பாக தலைவர் பிராட் டெய்லர் 4 விக்கெட்டுகளையும் மேஸன்‌ கிறேன், பென் கிறீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 38.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 52 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஜக் பேர்ண்காம் 32, ரயான் டேவிஸ் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக வனிது ஹஸரங்க, டமித் சில்வா தலா இரண்டு விக்கெட்டுகளையும் அசித பெர்னாண்டோ, சரித் அசலங்க, கமிந்து மென்டிஸ், லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .