Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துப் பதினொருவர் அணிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையிலான, இரண்டு நாள் பயிற்சியாட்டத்தில், இங்கிலாந்து டெஸ்ட் அணியில், தலைவர் அலிஸ்டியர் குக்குடன் இடம்பிடிப்பதற்கான போட்டியில் உள்ள, பென் டக்கெற், ஹசீப் ஹமீட் ஆகிய இருவரும் பிரகசித்துள்ளனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணி, தமது முதலாவது இனிங்ஸில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அபுல் மஸீட் 106, நஸ்முல் ஹொஸைன் ஷாந்தோ 72, மொஷடிக் ஹொஸைன் 47, நுருல் ஹஸன் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஸபார் அன்சாரி நான்கு, கரித் பற்றி, ஸ்டூவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அடுத்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து பதினொருவர் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பென் டக்கெற் 60, ஹசீப் ஹமீட் 57, கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தன்வீர் ஹைதர் நான்கு, தஸ்கின் அஹமட், சுபாஷிஸ் றோய், மொஷடிக் ஹொஸைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago