2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்தை முந்தியது வேல்ஸ்

Gopikrishna Kanagalingam   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய தரப்படுத்தலின்படி, இங்கிலாந்து அணி 10ஆம் இடத்திலும் வேல்ஸ் அணி 9ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தரப்படுத்தலின் முதலிடத்தில், ஆர்ஜென்டின அணி தொடர்ந்தும் காணப்படுவதோடு, பெல்ஜியம், ஜேர்மனி, கொலம்பியா, பிரேசில், போர்த்துக்கல், றோமானியா ஆகியன அடுத்த 6 இடங்களைப் பிடித்துள்ளன.

10ஆவது இடத்தில் காணப்பட்ட சிலி, இரண்டு முன்னேறி 8ஆவது இடத்தில் காணப்பட, 8ஆவது இடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து, 2 இடங்கள் பின்வாங்கி 10ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இதன்படி, கால்பந்தாட்ட வரலாற்றில், இங்கிலாந்தை விட வேல்ஸ் மேல்நிலையில் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது மாறியுள்ளது.

இத்தரப்படுத்தலில், இலங்கை ஓரிடம் முன்னேறி 182ஆவது இடத்திலும், இந்தியா அதே இடமாக 156ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

ஏனைய தெற்காசிய நாடுகளில், 170ஆவது இடத்தில் பங்களாதேஷ{ம் 171ஆவது இடத்தில் பாகிஸ்தானும் 175ஆவது இடத்தில் மாலைதீவுகளும் 184ஆவது இடத்தில் நேபாளமும் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .