2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இங்கிலாந்து வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் ஹார்டிப், சோபியா கார்டின்சில் இடம்பெற்ற ஒற்றை இருபது-20 போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றதது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அணித்தலைவர் ஒயின் மோர்கன் 39 பந்துகளில் 3, நான்கு ஓட்டங்கள், ஏழு ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களையும், மொயின் அலி 46 பந்துகளில் 6, நான்கு ஓட்டங்களையும், மூன்று ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட பற் கம்மின்ஸ் தனது நான்கு ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், நதன் கூல்ட்டினர்யில்  தனது 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தமது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 5 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. அவ்வணி சார்பாக ஸ்டீவன் ஸ்மித் 53 பந்துகளில் 7, நான்கு ஓட்டங்கள், 4, ஆறு ஓட்டங்கள் உட்பட 90 ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 32 பந்துகளில் ஆறு, நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் உட்பட 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் விலி 2 விக்கெட்களையும், மொயின் அலி, ஸ்டீவன் பின், ரீஸ் டொப்லி, பென் ஸ்டோக்ஸ் ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாயகனாக மொயின் அலி தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .