2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்தின் புதிய பயிற்றுவிப்பாளராக மக்கலம்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 04 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக பிரெண்டன் மக்கலம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கென அவருக்குள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியோடு இதிலும் கடமையாற்றவுள்ளார்.

புதிய மூன்றாண்டு ஒப்பந்தமொன்றுக்கு மக்கலம் இணங்கியுள்ளதோடு, அடுத்த உலகக் கிண்ணத் தொடர் வரையில் இங்கிலாந்து ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றவுள்ள மார்க்கஸ் ட்ரெஸ்கொதிக், மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணத்திலும் அதே பதவியிலும் தொடர, உத்தியோகபூர்வமாக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தோடு அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மக்கலம் கடமையாற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .