Editorial / 2020 நவம்பர் 09 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், ஆர்சனலின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா வென்றது.
அஸ்டன் வில்லா சார்பாக, ஒலி வட்கின்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் நடப்புச் சம்பியன்களான லிவர்பூலுக்குமிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை கப்ரியல் ஜெஸூஸ் பெற்றிருந்ததோடு, லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை மொஹமட் சாலா பெற்றிருந்தார்.
இந்நிலையில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் ஜேமி வார்டி பெற்ற கோலுடன் அவ்வணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஹரி கேன் பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் டொடென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago