Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 28 , பி.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வென்றிருந்த நிலையில், புனேயில் இன்று நடைபெற்ற மூன்றாவது போடியை வென்றமையைத் தொடர்ந்தே, 2-1 என தொடரை இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, 48.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றிஷப் பண்ட் 78 (62), ஷீகர் தவான் 67 (56), ஹர்டிக் பாண்டியா 64 (44), ரோஹித் ஷர்மா 37 (37), ஷர்துல் தாக்கூர் 30 (21), குருனால் பாண்டியா 25 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மார்க் வூட் 3, அடில் ரஷீட் 2 மற்றும் மொயின் அலி, லியம் லிவிங்ஸ்டோன், றீஸ் டொப்லி, சாம் கர்ரன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 330 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே ஜொனி பெயார்ஸ்டோ, ஜேஸன் றோயை புவ்னேஷ்வர் குமாரிடம் பறிகொடுத்தது. பின்னர் பென் ஸ்டோக்ஸும், டேவிட் மலன், ஜொஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, அடில் ரஷீட், மார்க் வூட் ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளிகளில் தங்கராசு நடராஜன், ஷர்துல் தாக்கூர், புவ்னேஷ்வர் குமாரிடம் வீழ்ந்தனர்.
இந்நிலையில், சாம் கர்ரன் மாத்திரம் தனித்துப் போராடியபோதும், புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, தங்கராசு நடராஜனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களையே பெற்ற இங்கிலாந்து ஏழு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 95 (83), டேவிட் மலன் 50 (50), லியம் லிவிங்ஸ்டோன் 36 (31), பென் ஸ்டோக்ஸ் 35 (39), மொயின் அலி 29 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தாக்கூர் 4, புவ்னேஷ்வர் குமார் 3, நடராஜன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனகாக சாம் கர்ரனும், தொடரின் நாயகனாக பெயார்ஸ்டோவும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago