Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 ஜூலை 12 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
16ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.
இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார்.
அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
17 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago