Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 21 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐந்தாவது போட்டியை வென்றமையையடுத்தே 3-2 என தொடரை இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா, முதன்முறையாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியொன்றில், ரோஹித் ஷர்மா, அணித்தலைவர் விராட் கோலி ஆரம்பத் துடுப்பாட்ட இணையுடன் சந்தித்தது.
ரோஹித்தின் அதிரடியான 64 (34) ஓட்டங்கள் மூலம் அதிரடி ஆரம்பத்தைப் பெற்ற இந்தியா, அவரது ஆட்டமிழப்பைத் தொடர்ந்தும் சூரியகுமாரின் அதிரடியான 32 (17) ஓட்டங்கள் மூலம் ஓட்ட விகிதத்தை 10க்கும் அதிகமாகவே வைத்துக் கொண்ட இந்தியா, விராட் கோலியின் ஆட்டமிழக்காத 80 (52), ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டமிழக்காத 39 (17) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 225 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே புவ்னேஷ்வர் குமாரிடம் ஜேஸன் றோயை இழந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஜொஸ் பட்லரின் 52 (34), டேவிட் மலனின் 68 (46) ஓட்டங்கள் மூலம் ஓட்ட விகிதத்தை 10 ஓட்டங்களுக்குடன் இங்கிலாந்தும் பேணியது.
எனினும், பட்லரின் விக்கெட்டை புவ்னேஷ்வர் குமார் கைப்பற்றியதோடு, ஷர்துல் தாக்கூர் (3), ஹர்டிக் பாண்டியா (1), தங்கராசு நடராஜனிடம் (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த இங்கிலாந்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களையே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
புவ்னேஷ்வர் குமார், தனது நான்கு ஓவர்களில் 15 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 17 பந்துகளில் ஓட்டமெதுவையும் வழங்கியிருக்கவில்லை.
இப்போட்டியின் நாயகனாக புவ்னேஷ்வர் குமார் தெரிவாகியதோடு, தொடரின் நாயகனாக விராட் கோலி தெரிவாகியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago