Shanmugan Murugavel / 2026 மே 03 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், கோமோவின் மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி சமப்படுத்தியது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜெனோவாவுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் உள்ளது. 70 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும் 67 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஏ.சி மிலனும் 64 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஜுவென்டஸும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட நாப்போலி ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .