Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய குரான் பிறீயை நடப்பு போர்மியுலா வண் சம்பியனான மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்த றெட் புல் அணியின் வெர்ஸ்டப்பன் முதலாமிடத்தைப் பெற்ற நிலையில், பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் லான்டோ நொரிஸ் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த நொரிஸின் சக மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
பந்தயத்தின்போது அவுஸ்திரேலியாவின் பியாஸ்திரி முன்னிலையில் இருந்தபோதும், பிரித்தானியாவின் நொரிஸின் டயர் மாற்றுதலின்போது தாமதம் ஏற்பட்ட நிலையில் அவரை முன்னுக்கு செல்ல அணி பணித்திருந்தது.
இவ்வாண்டுக்கான சம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் 324 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பியாஸ்திரி காணப்படுகின்றார். 293 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நொரிஸும், 230 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பனும் காணப்படுகின்றனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026