Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணி சிறிது தடுமாற்றத்தை எதிர்கொண்டுவரும் நிலையில், இந்திய அணியின் இரசிகர்கள், அவ்வணிக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டுமென, இந்திய அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், அவ்வணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையிலேயே, 'எங்களிடம் சிறந்த அணியொன்று இருக்கிறது. ஒவ்வொரு அணியும், மாற்றங்களுக்குள்ளாகச் செல்லும். சில சந்தர்ப்பங்களில் நீங்கள் சிறப்பாக விளையாடுவீர்கள், சில சந்தர்ப்பங்களில் நிலைமை மிகவும் கடினமாகும் என்பதோடு, உங்கள் திட்டப்படி நிகழ்வுகள் நடக்காது. ஆனால் அதற்காக, ஒவ்வொரு வார இறுதியிலும் உங்களுடைய அணி மீது தீர்ப்பொன்றை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என அர்த்தப்படாது" என சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'அவர்கள் சிறப்பாகச் செயற்பட்டால், அருமை, அவர்கள் மிகச்சிறப்பாகச் செயற்பட்டுள்ளார்கள், எனச் சொல்வதோடு, அடுத்த வாரத்தில் அவர்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறீர்கள். நாங்கள், சமநிலையொன்றை வெளிப்படுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். நாமெல்லோரும் கிரிக்கெட்டில் அதீத விருப்பைக் கொண்டவர்கள், நாம் பொறுமையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.
இந்திய அணி மீது விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்ட சச்சின், தென்னாபிரிக்க அணிக்கான தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தினார்.
குயின்டன் டீ கொக், பப் டு பிளெஸிஸ், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருக்குப் பாராட்டுக்களை வெளிப்படுத்திய அவர், ஏபி டி வில்லியர்ஸூக்கான விசேட பாராட்டுக்களை வெளிப்படுத்தினார்.
'அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்ச நிலையில் இருப்பதாக இருக்கலாம். அவர், மிகவும் மிகவும் நம்பமுடியாதளவுக்குத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கிறார்" என சச்சின் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago