2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்திய துடுப்பாட்ட வரிசையை விமர்சிக்கிறார் டோணி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மீது, இந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் டோணி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்தே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

'சில நேரங்களில், இந்திய துடுப்பாட்ட வரிசை சிறிது முரண்டுபிடிப்பதாகக் காணப்படுவதாக உணர்ந்தேன். 'இது தான் எனது துடுப்பாட்ட இடம், இங்கு தான் நான் துடுப்பெடுத்தாடுவேன்" என்ற மனப்பாங்கு காணப்பட்டது. ஆனால், கீழ்வரிசையில் துடுப்பெடுத்தாடும் போது தான் அங்குள்ள கடினம் உணரும்" என அவர் தெரிவித்தார்.

முன்வரிசையில் துடுப்பெடுத்தாடும் போது, தங்களுக்குக் கீழே மூன்று அல்லது நான்கு துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர் என்ற நம்பிக்கையுணர்வு காணப்படுமெனத் தெரிவித்த டோணி, ஆனால் 5ஆம், 6ஆம், 7ஆம் இலக்கங்களில் துடுப்பெடுத்தாடும் போது, அவ்வாறான எண்ணம் காணப்படாது எனத் தெரிவித்தார்.

இப்போட்டியில் தோல்வியடைவதற்கு, முதல் 10 ஓவர்களில் அதிக ஓட்டங்கள் பெறப்படாமையும், 31-40 வரையிலான ஓவர்களில் 37 ஓவர்கள் குவிக்கப்பட்டமையும் காரணமெனத் தெரிவித்த டோணி, இறுதிக் கட்டத்தில் துடுப்பெடுத்தாடுவது கடினமாக மாறியதெனத் தெரிவித்தார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, குயின்டன் டீ கொக்கின் சதம், பப் டு பிளெஸிஸின் அரைச்சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.

271 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 31 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களுடன் பலமான நிலையில் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் தடுமாறி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .