Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில், இந்தியாவை, நியூசிலாந்து தோற்கடித்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி, நியூசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் 118, டொம் லதாம் 46 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா, அமித் மிஷ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 243 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களையே பெற்று, ஆறு ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கேதார் யாதவ் 41, மகேந்திர சிங் டோணி39, ஹர்டிக் பாண்ட்யா 36, அஜிங்கியா ரஹானே 28 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் சௌதி மூன்று, ட்ரெண்ட் போல்ட், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, கேன் வில்லியம்ஸன் தெரிவானார்.
11 minute ago
23 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago
46 minute ago