2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியாவின் பயிற்சியாளராக கும்ளே

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 23 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ளே, ஒரு வருடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இன்று வியாழக்கிழமை (23) தரம்சாலாவில் அறிவித்தது.

இதேவேளை, பந்துவீச்சு, துடுப்பாட்ட மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கே, இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக முதல் முறையாக கும்ளே செயற்படவுள்ளார்.

இந்தியா கிரிக்கெட் சபை, இம்மாத ஆரம்பத்தில், பயிற்சியாளர் பதவிக்கு விளம்பரப்படுத்தியபோது, விண்ணப்பித்திருந்த 57 விண்ணப்பதாரிகளில் கும்ளேயும் ஒருவர் என்பதோடு, குறுக்கப்பட்ட 21 பேர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததோடு, சச்சின் டென்டுல்கர், சௌரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஸ்மன் ஆகியோரை உள்ளடக்கிய கிரிக்கெட் ஆலோசனை செயற்குழுவை, நேர்காணலுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்திருந்தார்.

இந்திய அணிக்கு முதலாவது உலகக்கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த கபில்தேவ், செப்டெம்பர் 2000ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததன் பின்னர், முழு நேரமாக அமர்த்தப்படும் முதலாவது பயிற்சியாளர் கும்ளே ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .