2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்தியாவை விட்டு முன்பதாகவே வெளியேறும் அக்ரம், அக்தர், டார்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான தொடருக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையின் நேர்முக வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர்களான வசீம் அக்ரம், ஷோய்ப் அக்தர் ஆகியோர் மும்பையில் இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு முன் நாடு திரும்பவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையே மும்பையில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைமையத்தில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு முன்பதாக, அங்கு புகுந்த பிராந்திய அரசியல் கட்சியான ஷிவ சேனா, பாகிஸ்தானுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்தே முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்கள் பாதுகாப்பு முன் நடவடிக்கையாக முன்பதாகவே வெளியேறுகின்றனர்.

மேற்படித் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அக்ரமின் முகவர் அர்சலான் ஹைதர், அக்ரமும், அக்தரும் சென்னையில் இடம்பெறவுள்ள நான்காவது போட்டியின்போது நேர்முக வர்ணனையில்  ஈடுபடுவார்கள் என்றும், மும்பையில் இடம்பெறவுள்ள ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கு இருநாள் முன்பதாக ஒக்டோபர் 23ஆம் திகதி நாடு திரும்புவார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பதாக, பாகிஸ்தானிய நடுவரான அலீம் டாரை இறுதி இரண்டு சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளுக்கான கடமைகளில் இருந்து விலக்கிக் கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. திங்கட்கிழமை, இந்திய கிரிக்கெட் சபை அலுவலகத்துக்குள் கடும்போக்காளர்கள் குழுவொன்று சென்றிருந்தமையே இதற்கான காரணம் என்று அது தெரிவித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .