Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.
ராஜ்கொட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, குயின்டன் டீ கொக்கின் 103, பப் டு பிளெஸிஸின் 60 ஓட்டங்களின் துணையோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் மோகித் ஷர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
272 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
விராத் கோலி 77, றோகித் ஷர்மா 65, மகேந்திரசிங் டோணி 47 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மோர்னி மோர்க்கல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago