2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இந்தியாவை வென்றது நியூசிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியில், 19 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மார்ட்டின் கப்தில் 72(84), கேன் வில்லியம்சன் 41(59), டொம் லதாம் 39(40), றொஸ் டெய்லர் 35(58) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளையும் அக்ஷார் பட்டேல், உமேஷ் யாதவ், ஹர்டிக் பாண்ட்யா, தவால் குல்கர்ணி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

261 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அஜின்கியா ரஹானே 57(70), விராத் கோலி 45(51), அக்ஷார் பட்டேல் 38(40), தவால் குல்கர்ணி ஆட்டமிழக்காமல் 25(26) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டிம் சௌதி மூன்று விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் மிற்செல்சந்தர், இஷ் சோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, மார்ட்டின் கப்தில் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .