Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பங்களாதேஷ் ஏ அணியுடனான போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட பஞ்சாப்பைச் சேர்ந்த சகலதுறை வீரர் குர்கிறீட் சிங் மன் ஒருநாள் குழாமிலும், இருபது -20 போட்டிகளுக்கான குழாமில், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்தும் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மகேந்திரசிங் டோணி தலைமையில் இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முழங்காலில் மேற்கொள்ளபப்ட்ட சத்திரசிகிச்சையிலிருந்து தேறி வரும் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி இரு குழாம்களிலும் இடம்பெறவில்லை.
இரு அணிகளுக்குமிடையிலான 3 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர் ஒக்டோபர் 2ஆம் திகதியும், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைக் கொண்ட தொடர் ஒக்டோபர் 11ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன.
நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான குழாம், பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
ஒ.நா.ச.போ. குழாம்: மகேந்திரசிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டுவேர்ட் பின்னி, ஷீகர் தவான், விராத் கோலி, புவனேஷ்வர் குமார், அக்ஸர் பட்டேல், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மோகித் சர்மா, றோகித் சர்மா, உமேஷ் யாதவ், குர்கிறீட் சிங் மன், அமித் மிஷ்ரா
இ-20.ச.போ. குழாம்: மகேந்திரசிங் டோணி, இரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டுவேர்ட் பின்னி, ஷீகர் தவான், விராத் கோலி, புவனேஷ்வர் குமார், அக்ஸர் பட்டேல், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மோகித் சர்மா, றோகித் சர்மா, ஸ்ரீநாத் அரவிந்த், ஹர்பஜன் சிங் அமித் மிஷ்ரா
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago