Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மாதம் சீனாவில் இடம்பெற்ற உலக சம்பியன்ஷிப்பில், மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற, ஆறு தடவை ஒலிம்பிக் சம்பியனான ஜமைக்காவின் உசைன் போல்ட், இந்த வருடம் இனி ஓடப்போவதில்லை என தீர்மானித்துள்ளார்.
காயங்களால் இப்பருவாகாலத்தில் பாதிக்கப்பட்டிருந்த 29 வயதான போல்ட், தனது மூன்று பிரிவு ஓட்டங்களிலும், தங்கத்தை வென்றமையானது, உலகளாவிய ரீதியில் இடம்பெறும் பாரிய சம்பியன்ஷிப் போட்டிகளில் ஐந்தாவது தடவையாகும். இது 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி முதலாக நீள்கின்றது.
எனினும், அடுத்த வருடம் 2016 இல் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் இடம்பெறவுள்ள, ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு, தனது இந்த பருவகாலத்தை முன்னரே முடித்துக் கொண்டார்.
பெய்ஜிஞ்சில், கடந்த சில பரபரப்பான வாரங்களுக்கு பின், 2015ஆம் ஆண்டில் இனி ஓடப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக, உசைன் போல்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நான் ஏற்கனவே அடுத்த வருடம் மற்றும் ரியோவில் இடம்பெறவுள்ள 2016 ஒலிம்பிக் போட்டிகளை பற்றி சிந்திப்பதாகவும், அங்கு நான், எனது 100 மீற்றர், 200 மீற்றர், மற்றும் 4*100 மீற்றர் பட்டங்களை தக்கவைக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், தற்போது பயிற்சியிலிருந்தான சிறிய இடைவேளையை தான் விரும்புவதாகவும், அடுத்த மாதம் பயிற்சிக்கு திரும்பவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
போல்டின், இந்த முடிவால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை புரூசெல்சில் இடம்பெறவுள்ள டயமண்ட் லீக்கை தவறவிடவுள்ளார். அங்கு இவர் 200 மீற்றர் போட்டிகளில் பங்கேற்கவிருந்தார். தான் எந்தவித காயங்களும் இல்லாமல் இந்த பருவகாலத்தை முடிப்பதில் மகிழ்ச்சியடைவதாக போல்ட் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago