Editorial / 2026 ஜனவரி 07 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026 ஐபிஎல் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மறைமுக தடை விதித்ததைத் தொடர்ந்து, வங்கதேச நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் உடனடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இணைய ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில், ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், முஸ்தாபிசூர் ரஹ்மானை கடும் போட்டிக்கு இடையே ரூ. 9.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டெல்லி மற்றும் சென்னை அணிகளுடன் போட்டியிட்டு அவரை கொல்கத்தா வாங்கியது.
இருப்பினும், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல்-ல் அனுமதிப்பது குறித்து பிசிசிஐ மற்றும் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 3) பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா வெளியிட்ட அறிவிப்பில், "தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, முஸ்தாபிசூர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
அவருக்குப் பதில் மாற்று வீரரைத் தேர்வு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தியாவில் விளையாடக் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக முஸ்தாபிசூரைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) அன்று பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், 11-வது பிஎஸ்எல் சீசனுக்கான வீரர்கள் வரைவுப் பட்டியலில் முஸ்தாபிசூர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago