Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக இந்தியக் குழாமொன்றில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மாயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, குறித்த குழாமில் இளம் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ்ஜும் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் டெஸ்ட் குழாமில் இடம்பெறும் முதற்தடவை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காயம் காரணமாக இஷாந்த் ஷர்மாவும் ஹர்டிக் பாண்டியாவும் குறித்த குழாமில் இடம்பெறாத நிலையில், ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இங்கிலாந்துக்கெதிரான இறுதி இரண்டு டெஸ்ட்களுக்கான இந்தியக் குழாமில் இடம்பெற்றிருந்த ஷீகர் தவான், கருண் நாயர் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை என்பதோடு, குறித்த குழாமிலிருந்தும் நீக்கப்பட்டு அதன்பின்னர் இங்கிலாந்துன் கவுண்டி போட்டிகளில் ஓட்டங்களைப் பெற்றிருந்த முரளி விஜயும் அறிவிக்கப்பட்ட குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
குழாம்: லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், பிறித்திவி ஷா, செட்டேஸ்வர் புஜாரா, விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே, ஹனும விஹாரி, றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், மொஹமட் சிராஜ், ஷர்துல் தாக்கூர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025