Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 01 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வெளியேற்றப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்றிரவு இடம்பெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் முடிவெதுவும் கிடைக்காத நிலையிலேயே இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து றோயல் சலஞ்சர்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதுவரையில் 13 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்த றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், இப்போட்டியில் முடிவு பெறப்படாத நிலையில் ஒரு புள்ளியையே பெற்றிருந்த நிலையில் ஒன்பது புள்ளிகளுடன் காணப்படுகின்றது. ஆகவே, எஞ்சியிருக்கின்ற போட்டியில் வெற்றிபெற்றாலும் ஐந்தாமிடத்தையே அடைய முடியும் என்ற நிலையில் பிளே ஓஃப் சுற்றுப் போட்டிகளுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 62/7(5/5ஓவ. ) (துடுப்பாட்டம்: விராத் கோலி 25 (07), ஏ.பி டி வில்லியர்ஸ் 10 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷ்ரேயாஸ் கோபால் 3/12 [1], ஒஷேன் தோமஸ் 2/6 [1], ஜெய்டேவ் உனத்கட் 1/9 [1], றியான் பராக் 1/10 [1])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 41/1 (3.2/5 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஞ்சு சாம்ஸன் 28 (13), லியம் லிவிங்ஸ்டோன் ஆ.இ 11 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 1/0 [0.2])
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago