2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்தியாவை வென்ற இலங்கை

Shanmugan Murugavel   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணித் தலைவர் சரித் அசலங்க, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, இனிங்ஸின் முதற் பந்திலேயே பதும் நிஸங்கவை மொஹமட் சிராஜ்ஜிடம் இழந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்ணாண்டோவும், குசல் மென்டிஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 40 (62) ஓட்டங்களுடன் அவிஷ்கவும், 30 (42) ஓட்டங்களுடன் மென்டிஸும் வொஷிங்டன் சுந்தரிம் ஒரு ஓவர் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த சதீர சமரவிக்கிரம அக்ஸர் பட்டேலிடம் வீழ்ந்ததோடு, ஜனித் லியனகே குல்தீப் யாதவ்விடம் வீழ்ந்ததோடு, அசலங்க சுந்தரிடம் வீழ்ந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த டுனித் வெல்லலாகே, கமிந்து மென்டிஸ் இனிங்ஸை நகர்த்தி சென்ற நிலையில் வெல்லாகே 39 (35) ஓட்டங்களுடன் குல்தீப்பிடம் வீழ்ந்ததோடு, கமிந்து 40 (44) ஓட்டங்களுடன் ரண் அவுட்டாக 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை இலங்கை பெற்றது.

பதிலுக்கு 241 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, அணித்தலைவர் றோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. பின்னர் ஜெஃப்ரி வன்டர்சேயிடம் வரிசையாக ஷர்மா 64 (44), கில் 35 (44) ஓட்டங்களுடனும் ஷிவம் டுபே, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுலின் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இந்தியா தடுமாறியது.

பட்டேல் 44 (44) ஓட்டங்களைப் பெற்றபோதும் அவர், சுந்தர், சிராஜ் அசலங்கவிடம் வீழ்ந்ததோடு அர்ஷ்டீப் சிங் ரண் அவுட்டாக 42.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்ற இந்தியா 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக வன்டர்சே தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .