Editorial / 2017 ஜூலை 04 , மு.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியாவுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், அன்டிகுவாவில், நேற்று முன்தினம் (02) இடம்பெற்ற நான்காவது போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர், தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எவின் லூயிஸ் 35 (60), கைல் ஹோப் 35 (63), ஷை ஹோப் 25 (39), றொஸ்டன் சேஸ் 24 (34), ஜேஸன் மொஹமட் 20 (33) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், உமேஷ் யாதவ், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 190 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 49.4 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்று, 11 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அஜின்கியா ரஹானே 60 (91), மகேந்திர சிங் டோணி 54 (114), ஹார்டிக் பாண்டியா 20 (21) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5, அல்ஸாரி ஜோசப் 2, கெஷ்ரிக் வில்லியம்ஸ், அஷ்லி நேர்ஸ், தேவேந்திர பிஷு ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக, ஜேஸன் ஹோல்டர் தெரிவானார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago